Sunday, December 14, 2008

டென்சனை தவிர்க்க...

டென்சன், தற்போதய பரபரப்பன சூழ்நிலையில் எல்லோர்வாழ்க்கையிலும் தவிர்க்கமுடியாத ஒரு விசயமாகிவிட்டது. லேட் நைட் வரை டீவி பார்ப்பது, காலையில் லேட்டாக எழுந்திறிப்பது, பின் அவசர அவசரமாக குளிந்து, சாப்பிட்டு, அலுவலகம் கிழம்ப, பஸ் கிடைக்குமா, நெரிச்சல், லேட்டாச்சே, மேனேஜர் பார்த்து விட்டாரா என அலுவலக வேலையை ஆரம்பிக்கும் முன்பே டென்சன். இப்படி வேலையை துவங்க வேலையிலும் குளருபடி டென்சனோ டென்சன்.

ஏற்கனவே டென்சனைப்பற்றி ஒரு பதிவு வந்திருக்கிறது. சில நண்பர்கள் டென்சனை குறைக்க சில பயிற்சி முறைகளை கேட்டிருந்தார்கள் (பின்னூட்டம் போட்டிருந்திருக்கலாம்) அவர்களுக்காக சில மூச்சி பயிற்சி.

1. உங்கள் கண்களை மூடிக்கொண்டு, உங்கள் விரல் நுனியால் நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு நடுவே தொடுங்கள். இந்நிலையிலேயே 3 முதல் 5 நிமிடங்களுக்கு மூச்சை மெதுவாகவும் ஆழமாகவும் இழுத்துவிடுங்கள்.

2. உடலை தளர்த்திக்கொண்டு நின்றோ அல்லது உட்கார்ந்த நிலையில், மெல்ல மூச்சை 5 வரை எண்ணிக்கொண்டு உள் இழுங்கள். பிறகு மனதிற்குள் 8 வரை எண்ணிக் கொண்டே மூச்சை வாய் வழியாக மெதுவாக வெளிவிடுங்கள். இவ்வாறே சில முறை திரும்ப செய்யுங்கள்.

இதில் உங்களுக்கு பலன் தெரிந்ததா? பயன் படுத்திபார்த்தவர்கள் தங்கள் அனுபவத்தை பின்னூட்டமாக இடவும்.

0 comments:

 

blogger templates | Make Money Online