Wednesday, December 17, 2008

0 % வட்டி

அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை இது வரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 0-0.25% என குறைந்துள்ளது. இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும்.

இந்த வட்டி விகித குறைப்பால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும். இந்த வட்டி விகித குறைப்பால் ஈரோ மதிப்பு உயரலாம். தங்கத்தின் மதிப்பு உயரவும் கூடும். அமெரிக்க டாலரின் மதிப்பின் அடிப்படையிலேயே சவுதி ரியால் மதிப்பு கணக்கிடப்படுவதால் சவுதி ரியால் மதிப்பும் குறையும். இந்தியாவிற்கு இன்னும் சில வாரங்களில் பணம் அனுப்புவதாக திட்டமிருந்தால் அந்த பணத்தை இப்போதே அனுப்புவது நல்லது. அல்லது கையில் இருக்கும் ரியாலில் பகுதியை ஈரோ வாக மாற்றிக்கொள்ளலாம்.

ஒரு மாதத்திற்க்கு பிறகு நிலமை மாறலாம். இந்த சூழ்நிலையை சரியாக பயன் படுத்தி கொள்ளுங்கள்.

Sunday, December 14, 2008

டென்சனை தவிர்க்க...

டென்சன், தற்போதய பரபரப்பன சூழ்நிலையில் எல்லோர்வாழ்க்கையிலும் தவிர்க்கமுடியாத ஒரு விசயமாகிவிட்டது. லேட் நைட் வரை டீவி பார்ப்பது, காலையில் லேட்டாக எழுந்திறிப்பது, பின் அவசர அவசரமாக குளிந்து, சாப்பிட்டு, அலுவலகம் கிழம்ப, பஸ் கிடைக்குமா, நெரிச்சல், லேட்டாச்சே, மேனேஜர் பார்த்து விட்டாரா என அலுவலக வேலையை ஆரம்பிக்கும் முன்பே டென்சன். இப்படி வேலையை துவங்க வேலையிலும் குளருபடி டென்சனோ டென்சன்.

ஏற்கனவே டென்சனைப்பற்றி ஒரு பதிவு வந்திருக்கிறது. சில நண்பர்கள் டென்சனை குறைக்க சில பயிற்சி முறைகளை கேட்டிருந்தார்கள் (பின்னூட்டம் போட்டிருந்திருக்கலாம்) அவர்களுக்காக சில மூச்சி பயிற்சி.

1. உங்கள் கண்களை மூடிக்கொண்டு, உங்கள் விரல் நுனியால் நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு நடுவே தொடுங்கள். இந்நிலையிலேயே 3 முதல் 5 நிமிடங்களுக்கு மூச்சை மெதுவாகவும் ஆழமாகவும் இழுத்துவிடுங்கள்.

2. உடலை தளர்த்திக்கொண்டு நின்றோ அல்லது உட்கார்ந்த நிலையில், மெல்ல மூச்சை 5 வரை எண்ணிக்கொண்டு உள் இழுங்கள். பிறகு மனதிற்குள் 8 வரை எண்ணிக் கொண்டே மூச்சை வாய் வழியாக மெதுவாக வெளிவிடுங்கள். இவ்வாறே சில முறை திரும்ப செய்யுங்கள்.

இதில் உங்களுக்கு பலன் தெரிந்ததா? பயன் படுத்திபார்த்தவர்கள் தங்கள் அனுபவத்தை பின்னூட்டமாக இடவும்.

Sunday, December 7, 2008

காஃபா அறிய படங்கள்



அணைவருக்கும் தியாக‌த்திருநாள் வாழ்த்துக்கள்


மக்காவில் உள்ள புனித காஃபா ஆலையத்தின் அறிய புகைப்படங்கள்...









காஃபா ஆலயத்தை மூடி இருக்கும் கருப்பு துணியினை "கிஸ்வா" என்றழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு வருடமும் புதிதாக செய்யப்பட்டு, மாற்றப்படுகிறது. "கிஸ்வா" என்றழைக்கப்படுகிற கருப்பு துணியினை மக்காவில் இதற்கென்று தனியாக அமைக்கப்பட்ட ஒரு தொழில் கூடத்தில் தயரிக்கப்படுகிறது. இந்த துணியின் மொத்த பறப்பளவு 658 சதுரடி. இதில் தங்கம், மற்றும் வெள்ளியால் குர்ரான் வசனங்களை எழுதப்பட்டுள்ளது. சுமார் 120 கிலோ தங்கமும், 50 கிலோ வெள்ளியும் இதற்காக பயன்படுத்தபடுகிறது. சுமாரக 17 மில்லியன் சவுதி ரியால் செலவில் தயாரிக்கப்படுகிறது.








Tuesday, December 2, 2008

அரசியல் தீவிரவாதம்





நன்றி கல்கி

Monday, December 1, 2008

Back Pain

முதுகு வலிக்கு காரணமாகும் இருக்கைகள்

அலுவலகத்தில் பணி புரிவோர் தங்களின் வேலை பளுவுக்கு மத்தியில் தலைவலி, முதுகுவலி போன்ற மற்ற தொந்தரவுகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.தலைவலிக்கு அடுத்தபடியாக பெரும்பாலானோரை அதிகம் பாதிப்பது முதுகுவலி தான்.இதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாம் அமரும் இருக்கை தான்.

தொடர்ந்து பல மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் மேலதிகாரிகளிடம் கூறி, அவரவர் உடல் வாகுக்கேற்றவாறு இருக்கைகளை தேர்ந்தெடுத்து அதில் தான் அமர வேண்டும்.

இருக்கையை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டியவை, பொதுவாக அவை வளைந்து கொடுக்கும் தன்மை உடையதாக இருக்க வேண்டும்.கைகளை வைத்துக் கொள்ள வசதி செய்யப்பட்டு இருக்க வேண்டும். நமக்கு தேவையான இருக்கையை தேர்வு செய்ததும், அதில் உட்கார்ந்து பார்த்து, அதற்கேற்றவாறு அதை மாற்றிக் கொள்ள வேண்டும். கூடுமானவரை நாம் பயன்படுத்தும் இருக்கையை மற்றவர்கள் உபயோகத்திற்கு தருவதை தவிர்க்க வேண்டும்.அவர்கள் அதில் அமருவதால், அதன் அமைப்புகள் மாறுபட்டு, அதனால் நமக்கு பாதிப்பு ஏற்படலாம். இருக்கையில் அமரும்போது முதுகு நன்றாக சாய்ந்திருக்கும்படியும்,முழங்கால் வரை இருக்கையில் பதிந்திருக்கும்படியும் பார்த்துக் கொள்வது நல்லது. அதேபோல் கணினிக்கு மிக அருகிலோ, அல்லது மிகவும் தள்ளியோ இருக்கையை அமைத்துக் கொள்வதால் கை, முதுவலி ஏற்பட வாய்ப்புண்டு.பணி புரியும் போது கை - கால்கள், கழுத்து, முதுகை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இருக்கையை விட்டு எழுந்திரிக்காமல் பணி புரிவதைவிட, அரைமணிக்கு ஒருமுறை எழுந்து அங்கும் இங்குமாக நடக்க வேண்டும்.

 

blogger templates | Make Money Online