"தலைவரே! நீங்க இப்ப சொன்னது நூத்துக்கு நூறு உண்மை...!''
''சரியான ஜால்ராய்யா நீ! இப்ப நான் ஒண்ணுமே சொல்லலை...
கொட்டாவி தான் விட்டேன்...!''
--------------
மன்னா ! நமது வீரர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைகிறது...!
அதுக்கு ஏன் இப்படி பதற்றப்படுகிறீர் அமைச்சரே !
ராணிகளின் எண்ணிக்கையிலும் ஒன்று குறைகிறது மன்னா !
------------
என் கணவர் பெரிய கலா ரசிகர்னு எனக்கு
நேத்துதான் தெரிஞ்சது !
'தெரிஞ்சதும் என்ன பண்ணினே ?'
'கலாவை வேலையைவிட்டு நிறுத்திட்டேன் !'
------------
"நான் இந்த ஸ்கூட்டரை 2 வருடமாக வைத்திருக்கிறேன், இது வரை ரிப்பேர் என்று ஒரு பைசா கூட செலவு செய்ததில்லை"
"ஆமாம், உங்க ஸ்கூட்டர் மெக்கானிக்கூட இதே தான் சொன்னார்"
------------
இப்படி பைக்ல போயிக்கிட்டே செல்போன் பேசுறது தப்பு மேன் !
அப்புறம் ஏன் சார் ’நிறுத்தாம பேசுங்கள்’-ன்னு விளம்பரம் செய்யுறாங்க !
------------
நம்ம தலைவரோட செல் நம்பர் இருபத்தாறு...
என்னது இரண்டு நம்பர்தானா ....?
நான் சொன்னது...... ஜெயில்ல அவரோட செல் நம்பர் !
------------
'நம்ம தலைவருக்கு விளம்பரமே பிடிக்காது !'
'அப்படியா ?'
'ஆமா. உடனே சேனலை மாத்திடுவார் !'
------------
'இட்லி சாஃப்டா இருக்குமா?'
'சாப்டா இட்லி இருக்காது, வயித்துக்குள்ள போயிடும்.'
-----------
'உங்க வீட்டுக்காரர் டி.வி. சீரியலைப் பார்த்து, ஏன்
அழுவுறாரு ?'
'நீங்க வேற.... அவர் பார்க்கிறது எங்க கல்யாண கேஸட் !'
-----------
"பேங்கில் பணம் எடுத்த "ஷாக்" அடிக்குமான்னு கேக்குறார்"
"ஏன்?"
"ஏன்னா அவர் வச்சிருக்கிறது கரன்ட் அக்கவுண்டாம்"
Tuesday, November 18, 2008
Net Jokes
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment